ADVERTISEMENT

கரோனா அச்சம்: ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!

02:51 PM Jul 21, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒலிம்பிக் போட்டிகள், வரும் 23ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கிடையே, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வந்த வீரர்கள், விளையாட்டை ஏற்பாடு செய்ய வந்தவர்கள் என இதுவரை ஒலிம்பிக் போட்டிகளோடு தொடர்புடைய 70 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தலைவர் டொஷிரோ மூட்டோவிடம், கடைசி நேரத்தில் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பிருக்கிறதா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், "கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் என்ன நடக்கும் என்பதை இப்போதே கூற முடியாது" என தெரிவித்தார்.

இந்தநிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், ஒலிம்பிக் போட்டியைத் திட்டமிட்டபடி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் ஒலிம்பிக் தொடக்க விழாவில், போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் சார்பில் ஆறு அதிகாரிகளை மட்டும் அனுமதிக்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT