Advertisment

முன்னிலையில் ஆஸ்திரேலியா....இந்தியாவை சோதிக்கும் மழை...

மட்ச்ஹ்

இந்திய கிரிக்கெட் அணி அஸ்திரேலிய அணியுடன் விளையாடுவதற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்று பயணத்தில் இந்தியா 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

Advertisment

இந்நிலையில், இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி 19 ஓவருக்கு 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. மழை விடாமல் பெய்து வருவதால், ஆட்டத்தின் ஓவர் 19ஆக குறைக்கப்பட்டு 137 ரன்கள் இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயக்கப்பட்டது. மழை விட்டதும் இந்திய அணி களத்தில் இறங்கும் எதிர்பார்த்துகொண்டிருக்கும்போது மழை விடாமல் பெய்துகொண்டே இருந்தது. இதனால் மீண்டும் இந்தியாவுக்கான இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 11 ஓவர்களில் 90 ரன்கள் அடிக்க வேண்டும் என்று டிஎல் படி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மழை விடாததால் ஆட்டம் பாதிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் ஆஸ்திரேலிய ஒரு போட்டியில் வெற்றிபெற்று 1-0 என்று முன்னிலையில் இருக்கிறது.

Advertisment

t20 Cricket australia indian cricket
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe