/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nattu-im_0.jpg)
தமிழகவீரர் நடராஜன், டி.என்.பி.எல். மற்றும் ஐ.பி.எல். தொடரில்சிறப்பாக ஆடியதால், இந்தியஅணியில்இடம்பிடித்தார். ஆஸ்திரேலியா - இந்தியாவிற்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில்அறிமுகமான நடராஜன்,ஆஸ்திரேலியாவின் முக்கியவீரர் லாபுசாக்னேவையும், ஆஷ்டன் அகரையும்காலிசெய்து இந்திய அணியின் வெற்றிக்குஉறுதுணையாக இருந்தார்.
அறிமுகப்போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாக பந்து வீசியநடராஜானுக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்தநிலையில், இந்தியாவிற்காகமுதல் போட்டியில்விளையாடியஅனுபவத்தைநடராஜன், தனதுட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர், "இந்திய அணிக்காகவிளையாடியதருணம் கனவுபோல் இருந்தது. என்னைவாழ்த்தியஉங்கள் அனைவருக்கும் எனதுநன்றிகள். அதிகசவால்களை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறேன்" எனகூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)