Advertisment

வாகை சூடிய இந்தியா; வருத்த செய்தி சொன்ன கோலி, ரோஹித்

Thrill India win in T20; Fans celebrate

Advertisment

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வகை சூட்டியுள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா அணியோடு மோதிய இந்தியா அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. பார்படாசில் நடந்த இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்களையும், அக்சர் படேல் 47 ரன்களும், ஷிவம் துபே 27 ரன்களும் அடித்தனர். பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியுள்ளது. இந்திய அணியில் ஹர்திக் மூன்று விக்கெட்டுகளையும், பும்பரா, ஹர்ஷித் சிங் தலா இரண்டு விக்கட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் சாலையில் கூடி நின்று பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisment

2013 ஆம் ஆண்டுக்குப் பின் ஐசிசி தொடரில் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மகேந்திர சிங் தோனி, 'போட்டியில் இதயத்துடிப்பு எகிறிய போதும் வீரர்கள் நம்பிக்கை உடன் செயல்பட்டனர். இதைவிட சிறந்த பிறந்தநாள் பரிசு இருக்க முடியாது என அணி வீரர்களுக்கு நன்றி' எனதெரிவித்துள்ளார். கடைசி வரை பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வாகை சூடியுள்ளது. அதேநேரம் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

cricket India t20
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe