Skip to main content

மூன்றாவது ஒரு நாள்.... வெற்றி கோப்பை யாருக்கு?

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

Third one day.. Victory and trophy for whom?

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கொடுத்துவிட்டு டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுவிட்டது. 

 

ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்க ஷிகர் தவான் தலைமையிலான இளம் அணி தேர்வு செய்யப்பட்டது. முதல் இரு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. இன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் வெல்லும் அணி இரு வெற்றிகளுடன் கோப்பையை கைப்பற்றும்.

 

ஷிகர் தலைமையிலான இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகின்றனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தால் மட்டுமே இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி சாத்தியமாயிற்று. சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்ரேயாஷ் ஐயர் நல்ல ஃபார்மில் உள்ளனர். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் தனது ஆட்டத்தை இன்றும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் பந்துவீச்சாளர்களை பொறுத்த வரையில் சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் ஆறுதல் அளிக்கின்றனர். 

 

தென் ஆப்பிரிக்க அணியில் ஒருவர் எதிர்பாராமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினாலும் அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பினை உணர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்க்கின்றனர். இது அந்த அணிக்கு பெரும் பலம். டாப் ஆர்டர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு பெரிதும் உதவுகிறது. பந்து வீச்சிலும் நல்ல நிலையிலேயே உள்ளனர். 

 

கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னும் மெனக்கெட்டு தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தால் ஒரு வேளை வெற்றி பெற்று இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த கூற்று 10 ஆண்டுகளுக்கு முந்தைய கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே எடுபடும். ஏனெனில் இப்பொழுது ஆடும் பேட்ஸ்மேன்கள் தேவைப்படும் பொழுதெல்லாம் பந்தை எல்லைக்கோட்டிற்கு வெளியே அனுப்பும் திறன் பெற்றுள்ளனர். எனவே இரு அணிகளும் பந்து வீச்சில் கவனம் செலுத்தினால் அன்றி எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்த முடியாது.

 

 

Next Story

RCB vs PBKS; நிதானமாக ஆடிய பஞ்சாப் கிங்ஸ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

RCB vs PBKS ipl live score update dhawan plays important knock

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடி வருகிறது. 6 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். கோலி 35 ரன்களுடனும், பட்டிதார் 3 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

Next Story

“இந்த போட்டியில் பாடங்களை கற்றுக் கொண்டோம்” - ரோஹித் சர்மா

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

“Lessons learned in this match” - Rohit Sharma

 

8 ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

 

பெர்த் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை பறிகொடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 68 ரன்கள் அடித்தார்.

 

சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க அணியில் லுங்கி இங்கிடி 4 விக்கெட்களும் பார்னெல் 4 ஓவர்கள் வீசி ஒரு ஓவர் மெய்டனாகவும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும் எடுத்தார்.

 

134 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி துவக்கத்தில் சில விக்கெட்களை இழந்தாலும் மார்க்ரம், மில்லர் ஜோடி இணைந்து தென் ஆப்பிரிக்க அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது. 19.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களையும் ஷமி, ஹர்திக், அஷ்வின் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். ஆட்டநாயகனாக இங்கிடி தேர்வு செய்யப்பட்டார்.

 

ஆட்டம் முடிந்ததும் ரோஹித் சர்மா போட்டி குறித்து பேசினார். அதில், “நாங்கள் பீல்டிங் சரியாக செய்யவில்லை என்பது உண்மை. நாங்கள் சில ரன் அவுட்களை விட்டுவிட்டோம். இந்த போட்டியில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டோம். அதே சமயத்தில்  மில்லர் சில ஷாட்களை மிகச் சிறப்பாக ஆடினார்” என்றார்.