“They will definitely win the trophy,” assured abd

Advertisment

முன்னாள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரும் மிஸ்டர் 360 என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான ஏபி டிவில்லியர்ஸ் இந்திய அணிதான் உலகக் கோப்பையை வெல்லும் என்று கூறியுள்ளார்.

8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர் 12 சுற்றுகள் முடிந்து 4 அணிகள் அரையிறுதிக்குத்தகுதி பெற்றுள்ளன. முதல் பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் இரண்டாம் பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் தகுதி பெற்றுள்ளன.

Advertisment

இந்நிலையில் பிரபல தனியார் ஊடகத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, “இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அதில் இந்தியாதான் வெற்றி பெறும். இந்திய அணியில் அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். சூர்யகுமார் மற்றும் விராட் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்திய அணி வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள். இந்திய அணி இங்கிலாந்து உடனான போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன். அரையிறுதியில் அவர்கள் வென்றால் நிச்சயம் கோப்பையை வெல்வார்கள்” எனக் கூறியுள்ளார்.