Advertisment

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; ரஹானேவுக்கு வந்த அழைப்பு

Test Championship Final; A call to Rahane

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Advertisment

சில தினங்களுக்கு முன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காகவும் இங்கிலாந்து உடன் ஆஷஷ் தொடருக்காகவும் 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. அதில், “பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசானே, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், டோட் மர்பி மேத்யூ ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் மே 28 ஆம் தேதிக்குள் 15 பேர் கொண்ட இறுதி அணி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இந்திய அணியும் அறிவித்துள்ளது. அதில் ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவதால் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.இந்திய அணியில், “ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சித்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் அணியில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் தனது காலடியை ரஹானே பதிக்க உள்ளார். ரஹானே கடைசியாக இந்தியாவின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு நடந்த நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடிய ரஹானே முதல் இன்னிங்ஸில் 49 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 15 ரன்களை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

காயத்தின் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் அணியில் இடம்பெறவில்லை. தற்போது தொடர்ச்சியாக சொதப்பி வரும் சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பெறவில்லை. மேலும் விபத்து காரணமாக சிகிச்சையில் உள்ள ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக பரத் சேர்க்கப்பட்டுள்ளார். ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட உனத்கட் மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe