Advertisment

இந்திய அணி குழுவில் மேலும் ஒருவருக்கு கரோனா ; ஐந்தாவது டெஸ்ட் நடப்பது சந்தேகம்!

team india

இந்தியா - இங்கிலாந்திற்கெதிரானடெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்தச்சூழலில்இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.அதனைத்தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருணுக்கும், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதருக்கும் கரோனா உறுதியானது. இதனையடுத்துஇவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்தநிலையில்தற்போது இந்திய அணியின் உதவியாளர் குழுவில் உள்ள ஒருவருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்துஇந்திய அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, அறையிலேயே இருக்குமாறுஇந்திய அணி வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இதனால் நாளை இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறுமா எனச் சந்தேகம் எழுந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் வாரியம், ஐந்தாவது டெஸ்ட் நடப்பதை விரும்பவில்லை எனத்தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

INDIA VS ENGLAND team india
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe