Advertisment

இருபது ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு - யார் யார் இடம்பெற வாய்ப்பு?

natarajan shardhul thakur

Advertisment

2021 இருபது ஓவர் உலகக்கோப்பைக்கானஇந்திய அணி இன்று (08.09.2021) அறிவிக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா - இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பேஅணியின் தேர்வுக்குழு, கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் காணொளி வாயிலாக சந்தித்து அணியை தேர்வு செய்துவிட்டதாக கூறியுள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்கள், இன்று மீண்டும் ஒருமுறை அவர்கள் காணொளி மூலமாக சந்தித்து அணியை உறுதி செய்வார்கள் எனவும், அதன் பிறகு இந்திய அணி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளன.

இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் ஷர்மா, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெறுவது உறுதியென்றநிலையில், ஷிகர் தவான், கே.எல். ராகுல் ஆகிய இருவரில் ஒருவருக்கே அணியில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது. சூர்யகுமார் யாதவும், அண்மையில் சிறப்பாக விளையாடிவரும் ஷார்துல்தாகூரும் அணியில் நிச்சயம் இடம்பிடிப்பார்கள்என கூறப்படுகிறது.

மேலும், காயத்தில் இருந்துமீண்டுள்ளஷ்ரேயாஸ் ஐயர் அணிக்குத் திரும்ப உள்ளதாகவும், அதேநேரத்தில்ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகியுள்ள வாஷிங்டன் சுந்தர் இந்தியஅணியில் இடம்பெறுவது கடினம் என கூறப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டு வீரர் நடராஜன் அல்லது சேத்தன் சகாரியா ஆகியோரில் ஒருவர் இடம்பெறலாம் எனவும் கூறப்படுகிறது.

Advertisment

இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திலும், ஓமன் நாட்டிலும்அக்டோபர் 17 முதல் நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

team india T20 WORLD CUP 2021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe