syed mushtaq ali trophy

Advertisment

2021 - 2022ஆம் ஆண்டுக்கானசையத் முஷ்டாக் அலி டிராஃபியின்(இருபது ஓவர்) இறுதிப் போட்டி இன்று (22.11.2021) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த கர்நாடகா 151 ரன்கள் எடுத்தது.

இதனைத்தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி, அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்தாலும் சீரான வேகத்தில் ரன்களைசேர்த்தது. இந்தநிலையில், ஆட்டத்தின் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி ஓவரின் முதல் பந்து, தமிழ்நாடு வீரர்சாய் கிஷோரின்பேட்டில் எட்ஜ் ஆகிய பவுண்டரிக்குச் சென்றது. இதன்பின்னர்சிங்கிள்களும்வொய்டும் வரவே கடைசி பந்தில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. இதனால் பரபரப்பு எகிறிய நிலையில், தமிழ்நாடு வீரர் ஷாருக்கான் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். இதன்மூலம் தமிழ்நாடு அணி, சையத் முஷ்டாக் அலிடிராஃபியை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று அசத்தியுள்ளது.