Skip to main content

மாற்றுத்திறனாளிகள் கபாடி போட்டி! எதிரணியினரை தும்சம் செய்த தமிழ்நாட்டு வீரர்கள்! 

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

TamilNadu won  National wide Kabadi computation

 

தேசிய அளவிலான 4வது மாற்றுத் திறனாளிகளுக்கான கபாடி போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 2  நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தெலுங்கானா,  மகாராஷ்டிரா, ஹரியானா, உத்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்த்தான், பீகார், சத்தீஸ்கர், விதர்பா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 16 மாநில அணிகள் பங்கேற்றன. கடந்த 29ந் தேதி கோப்பை மற்றும் வீரர்கள் அறிமுக விழா நடந்தது. இதனைத்தொடர்ந்து 30ந் தேதி கபாடி போட்டி தொடங்கி நடைபெற்றது. 

 

முதல் போட்டியில் தமிழ்நாடு-கர்நாடக அணி வீரர்கள் களம் கண்டதில் தமிழ்நாடு அணி 33-20 புள்ளிகள் பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது. ஜார்க்கண்ட் அணியுடன் மோதிய தமிழ்நாடு அணி 45-9 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் தெலுங்கானா அணியுடன் மோதிய தமிழக அணி 33-3 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய தமிழக அணி, மஹாராஷ்டிரா அணியை 42-21 வென்று  இறுதிச்சுற்றிக்கு தகுதி பெற்றது.

 

அனல் பறக்க நடந்த இறுதி ஆட்டத்தில் ஆந்திராவை எதிர்கொண்ட தமிழக அணி 45-25 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்று கோப்பையை தன் வசமாக்கி 4வது முறையாக கோப்பையை தக்க வைத்துக்கொண்டது. தமிழக அணி எதிர்கொண்ட ஒவ்வொரு ஆட்டத்திலும் தன்னை எதிர்த்து விளையாடிய அணிகளை அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

 

இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் தமிழக கபடி வீரர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். தமிழக மாற்றுத் திறனாளிகள் கபாடி சங்க பொதுச்செயலாளர், தேசிய மாற்றுத்திறனாளிகள் கபாடி கூட்டமைப்பின் துணைத்தலைவர் ரமேஷ் கண்ணன் மற்றும் அணி கேப்டன் மகேஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

 

அப்போது அவர்கள் கூறியதாவது; ‘பல ஆண்டுகளாக தமிழ்நாடு அணிக்காக விளையாடி கொண்டிருக்கும் வீரர்களுக்கு இதுவரைக்கும் அரசு சார்பில் இருந்து பெரிய அளவில் எந்த ஒரு உதவித் தொகையோ, அரசு வேலை வாய்ப்போ கிடைக்கவில்லை, அதனால் வீரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசாங்க வேலை உறுதி செய்ய வேண்டும். அதே போன்று, இனிமேல் வருங்காலத்தில் வரக்கூடிய வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்டம் தோறும் பயிற்சி ஆட்டம்  விளையாடுவதற்கு மைதானங்கள் அமைத்து தரவும், மாதந்தோறும் ஊக்கத் தொகை வழங்கவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவித்தார். சங்க பொருளாளர் செந்தில் குமார், சங்க ஆலோசகர் பாக்கியதான், உள்ளிட்ட அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி; கபடியில் ஹரியானா அணி வெற்றி

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
khelo India Games; Haryana team wins in Kabaddi

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நாளை (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதில், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

அதே சமயம் சென்னையில் உள்ள நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் நடைபெறும் ‘கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு’ தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக நாளை (19.01.2024) தனி விமானம் மூலம் சென்னை வரவுள்ளார். மேலும் 5:45 மணி அளவில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் ஒரு நாள் முன்னதாக இன்று (18.01.2024) கேலோ இந்தியா விளையாட்டின் ஒரு பகுதியாக கபடி போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்றது. இரு பிரிவுகளில் நடைபெற்ற மகளிர் பிரிவு கபடி போட்டியில் 41-20 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு அணியை ஹரியானா அணி வீழ்த்தியது. 

Next Story

'கபடி வீரர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்'- அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

 'Insurance for Kabaddi Players; Good news will come'- Minister Meiyanathan's speech

 

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக, மற்றும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அறந்தாங்கியில் கிரிக்கெட் போட்டியும், கீரமங்கலத்தில் மகளிருக்கான கபடிப் போட்டியும் நடத்த ஏற்பாடாகி போட்டிகளை தயாநிதி மாறன் எம்.பி தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

திட்டமிட்டபடி அறந்தாங்கி கூத்தாடிவயலில் நடந்த கிரிக்கெட் இறுதிப் போட்டிகளை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் தயாநிதி மாறன் எம்.பி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வருவதாக ஓய்விற்காக ஒரு விடுதியில் தங்கியவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் ஓய்வு தேவை என கூறியதால் கீரமங்கலத்தில் நடக்கும் மகளிர் கபடி போட்டிக்கு செல்ல முடியாமல் மாலையில் மதுரை வழியாக சென்னை திரும்பினார். இந்நிலையில் கீரமங்கலம் மகளிர் கபடிப்  போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன்  பேசுகையில், ''6 கோடுகளை மட்டும் போட்டு விளையாடும் கபடி, ஒரு மூங்கில் குச்சியுடன் விளையாடும் சிலம்பம் போன்ற தமிழர்களின் விளையாட்டுகள் இன்று உலக அளவில் போய்விட்டது. சிலம்ப வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கியது இப்போதைய முதலமைச்சர் தான். அதேபோல கபடி வீரர்களுக்கு பாதுகாப்பிற்காக காப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரிடமும், விளையாட்டுத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைத்திருக்கிறேன். விரைவில் முதலமைச்சர் நல்ல செய்தியை சொல்வார். இதுவரை கட்டாந்தரையில் கபடி விளையாடிய வீரர்களுக்காக பாதிப்புகளை குறைக்க மேட் வழங்கி இருக்கிறோம்'' என்றார்.