கடைசி டெஸ்ட் போட்டி.. களமிறங்கும் தமிழக வீரர் நடராஜன்..! 

tamilnadu player nadarajan in ind aus last test

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழக வீரர் நடராஜன் மற்றும் சுழல் பந்து வீச்சாளர் வாஷிங்கடன் சுந்தர் ஆகியோர் களமிறங்கியிருக்கிறார்கள்.

4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா அணி 27 ஓவர்கள் முடிவில் 65 இரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்து ஆடிவருகிறது. இந்திய அணியின் மொஹம்மத் சிராஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

Australia India nadarajan Test cricket
இதையும் படியுங்கள்
Subscribe