Skip to main content

ஆசிய தடகள போட்டியில் சாதனை படைத்த தமிழக பெண்...

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

23 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது.  

 

tamilnadu girl gomathi won gold in asian athletic championship

 

 

43 நாடுகளை சேர்ந்த தடகள வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 20 நொடிகளில் கடந்து தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இவரின் வெற்றிக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.  

 

 

Next Story

தமிழக அரசு சார்பில் கத்தார் தமிழர் சங்கத்திற்கு பாடப்புத்தகம் வழங்கல்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
TN Govt to provide textbooks to the Qatar Tamil Society

கத்தார் தமிழர் சங்கத்திற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் தமிழ் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கத்தார் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான 5 ஆயிரத்து 450 தமிழ் பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (13.03.2024) கத்தார் தமிழர் சங்கத்திற்கு வழங்கினார். இப்புத்தகங்களை கத்தார் தமிழர் சங்க நிர்வாகிகளான லட்சுமி மோகன் (ஒருங்கிணைப்பாளர்), அடிலாஸ் மகேந்திரன், செந்தில் (வளைகுடா தமிழ்ச்சங்கம்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் கஜலட்சுமி மற்றும் இணை இயக்குநர் சங்கர சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story

இஸ்ரேலுக்கு உளவு?; மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்கள் விடுதலை!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
8 Indians sentenced to death in Qatar released for Spying for Israel

கடந்த வருடம் புதிய நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கும் திட்டத்தை கத்தார் நாடு செயல்படுத்தி இருந்தது. அங்கு தயாரிக்கப்பட இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஜெர்மன் நாட்டின் தொழில்நுட்பத்துடன் சேர்த்து வடிவமைக்கப்பட்டு கத்தார் நாட்டின் கப்பல் படைக்காக உருவாக்கப்பட இருந்தது. இந்த வடிவமைப்புப் பணிகளில் ஈடுபட்ட நிறுவனங்களில் ஒன்று 'அல்தாரா'.  இந்த நிறுவனம் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 75 பேரை பணியில் அமர்த்தியிருந்தது. 

இந்த 75 பேரில் முன்னாள் இந்திய வீரர்கள் 8 பேர் இஸ்ரேல் நாட்டுக்காக உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் அந்த 8 பேரையும் கடந்த 2022ஆம் ஆண்டு கத்தார் உளவுத்துறை கைது செய்தது. அவர்கள் மீதான வழக்கு விசாரணை கத்தார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி வெளியானது. அதில் அந்த முன்னாள் இந்திய வீரர்கள் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது கத்தார் நீதிமன்றம். 

இந்த தீர்ப்பிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘எட்டு பேரின் குடும்பத்தினரோடும், சட்ட வல்லுநர்களுடனும் தொடர்பில் உள்ளோம். குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றுள்ள இந்தியர்கள் 8 பேரைக் காக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து வருகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து, முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை வழங்கியதை எதிர்த்து கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மேலும், இந்திய அரசின் மேல்முறையீடு குறித்து விரைவில் விசாரிக்கவும் கத்தார் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணை செய்த கத்தார் நீதிமன்றம், 8 இந்திய கடற்படை முன்னாள் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சிறை தண்டனையாக குறைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், 8 இந்திய கடற்படை முன்னாள் வீரர்களின் சிறைத் தண்டனையை கத்தார் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் அவர்கள் தாயகமான இந்தியாவிற்கு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது 8 வீரர்களில் 7 பேர் இன்று டெல்லி வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.