T. Natarajan

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான தொடரில் பங்கேற்கும் அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், 20 ஓவர் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரரான நடராஜன் இடம் பிடித்துள்ளார். சேலத்தை பூர்வீகமாகக்கொண்ட நடராஜன், நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி தன்னுடைய அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Advertisment

இதனையடுத்து, நடராஜனுக்கு வாழ்த்துத் தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் திரு.நடராஜன் அவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment