தேசிய அளவிலான சுவர் ஏறுதல் போட்டி; பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்!

Tamil Nadu athlete wins medal at National level mountaineering competition

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள யவனிகா, மாநில இளைஞர் மையத்தில் தேசிய அளவிலான 28வது தேசிய விளையாட்டு சுவர் ஏறுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை இந்திய மலையேறுதல் அறக்கட்டளை (IMF) என்ற அமைப்பு நடத்தியது.

தேசிய அளவிலான நடந்த இந்த போட்டியில், இந்தியாவில் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். அதில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமர் கண்ட்வால் என்பவர் தங்கப் பதக்கம் வென்றார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீஹான் கைலாஸ் மராத்தே என்பவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்யா பந்தலா என்பவர் வெண்கலப் பதக்கம் வென்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தடகள வீரர் பெற்ற முதல் பதக்கம் இதுவே ஆகும் என்று கூறப்படுகிறது.

40க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களுடன் தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் இந்த விளையாட்டை, மேலும் வளர்ச்சி பெற ஆதரிக்க வேண்டும் என, தமிழ்நாட்டு மலை ஏறுதல் விளையாட்டு குழுவினர் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Bangalore medal sports
இதையும் படியுங்கள்
Subscribe