Advertisment

காமன்வெல்த் போட்டியில் புதிய சாதனை படைத்த தமிழக வீரர்

Tamil Nadu athlete r dhinesh sets new record Commonwealth Powerlifting Championship

நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரம் அருகேவசிக்கும் ஆர். தினேஷ் சப்-ஜூனியர் 66 கிலோ உடல் எடைப் பிரிவில் புதிய சாதனைபடைத்துள்ளார். இவர் டெட் லிஃப்ட் 218 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றதுடன் முந்தைய சாதனையான 217.5 கிலோ என்ற சாதனையைமுறியடித்து காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.

Advertisment

மேலும், ஸ்குவாட்டில் 200 கிலோ எடையைத் தூக்கி தங்கமும், பென்ச் பிரஸ்சில் 120 கிலோ எடையை தூக்கி தங்கமும், மொத்தம் 538 கிலோ எடையைத் தூக்கியதற்காக தங்கம் என நான்கு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். இப்போட்டியின் இரண்டாவது அதிகபட்ச எடை தூக்கியவர் என்பதைப் பாராட்டி இவருக்கு “ஸ்டிராங்மேன்-2″ என்ற விருது வழங்கப்பட்டது.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe