தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பந்துவீச்சாளரான தப்ரைஸ் ஷாம்சி மைதானத்திலேயே மேஜிக் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் ஸான்சி சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் கேப்டவுன் பிளிட்ஸ் - பார்ல் ராக்ஸ் அணிகள் மோதின. இதில் பார்ல் ராக்ஸ் அணியை சேர்ந்த தப்ரைஸ் ஷாம்சி, கேப்டவுன் பிளிட்ஸ் அணியின் விக்கெட் ஒன்றை வீழ்த்தினார். அப்போது, கொண்டாடத்தின் ஒரு பகுதியாக, தனது பையில் இருந்து கர்சீப் போன்ற துணியை எடுத்து காற்றில் சுழற்றினார். அப்போது அந்த துணி ஒரு குச்சி போன்று மாறியது. இதனை கண்ட ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் என அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இந்த மேஜிக் கொண்டாட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.