t20 world cup

இந்தியாவில் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisment

ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை நடைபெற இருந்தது. கரோனா நோய்த்தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவதால் இத்தொடரை ரத்து செய்வதாக ஐசிசி சில வாரங்களுக்கு முன் அறிவித்தது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து ஐசிசி தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு நடைபெற இருந்த தொடரை 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது

Advertisment

இந்தாண்டு டி20 உலகக்கோப்பை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.