Advertisment

டி20 உலகக்கோப்பை- இந்திய அணி பேட்டிங்!

T20 World Cup - Indian team batting!

Advertisment

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது.

கடந்த 2019- ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற வரலாற்றைத் தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் இரு நாட்டு ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் கிரிக்கெட் போட்டியைப் பார்த்து வருகின்றன.

சூப்பர் 12 சுற்றில் குரூப்- 2 பிரிவில் இந்தியா- பாகிஸ்தான் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

dubai INDIA CRICKET TEAM Pakistan cricket
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe