/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a (61)_0.jpg)
2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற இருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக அதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 20 ஓவர் உலகக்கோப்பையை இந்தியாவிலேயே நடத்த முடியுமா என்பது குறித்து முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஜூன் 28ஆம் தேதிவரை (இன்று) அவகாசம் வழங்கியது.
இதற்கிடையே இருபது ஓவர் உலகக்கோப்பை இந்தியாவிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும், அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்திருந்தஇந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளர் ஜெய் ஷா, "நாட்டில் நிலவும் கரோனா நிலை காரணமாக, இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்ட இருபது ஓவர் உலகக்கோப்பையை, நாம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றலாம். நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்துவருகிறோம். வீரர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் எங்களுக்கு மிக முக்கியமானவை. நாங்கள் விரைவில் இறுதி அழைப்பை எடுப்போம்" என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இந்தியாவில் நடைபெறவிருந்த இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)