Advertisment

டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி வாய்ப்பை தவற விட்ட இந்திய அணி...

india women

மேற்கு வங்க தீவுகளில் 6 வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரையிறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் மோதியது. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Advertisment

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணி19.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து இங்கிலாந்து மகளிர் அணி 113 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கியது. 17.1 ஓவர்களில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 116 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. இதன் மூலம் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இருந்து இந்திய மகளிர் அணி வெளியேறியுள்ளது. வருகின்ற 25ஆம் தேதி நடெபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

Advertisment

women t20 world cup indian women cricket
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe