tamilnadu

2021 - 2022ஆம் ஆண்டுக்கானசையத் முஷ்டாக் அலி டிராஃபி (இருபது ஓவர்) தொடரின்அரையிறுதிப் போட்டிகள் நேற்று(19.11.2021) தொடங்கியது. இந்த தொடரில் முதல் அரையிறுதியில் தமிழ்நாடும், ஹைதராபாத்தும்மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Advertisment

இதனைத்தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி, 14.2 ஓவரில் 92 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. தமிழ்நாட்டு அணியில் அதிகபட்சமாக கேப்டன் விஜய் ஷங்கர்43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Advertisment

இதற்கிடையே, இரண்டாவது அரையிறுதியில் கர்நாடகா அணியும், விதர்பா அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெல்லும் அணியைதமிழ்நாடு நாளை மறுநாள் (22.11.21) நடைபெறும் இறுதிப் போட்டியில் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.