Advertisment

வெளியானது சுரேஷ் ரெய்னாவின் 'BELIEVE'

SURESH RAINA

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக விளங்கியவர் சுரேஷ் ரெய்னா. இவர்கடந்த ஆண்டு, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். இருப்பினும், ‘சின்ன தல’ என ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடிவருகிறார்.

இந்தநிலையில் சுரேஷ் ரெய்னா,பாரத் சுந்தரேசன் என்பவரோடு இணைந்து தனது சுயசரிதையை எழுதியுள்ளார். அதில் சுரேஷ் ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்வில் மட்டுமின்றி, தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களும்இடம்பெற்றுள்ளன. சுரேஷ் ரெய்னா தனது புத்தகத்திற்கு ‘பீலீவ்’(believe) என பெயரிட்டுள்ளார்.

இந்தப் புத்தகம் தற்போது வெளியாகியுள்ளது. முன்னணி புத்தக கடைகளில் மட்டுமல்லாமல் அமேசான், ஃப்ளிப்கார்ட்தளங்களிலும் இந்தப் புத்தகம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

biography Suresh Raina
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe