இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Advertisment

suresh raina underwent a knee operation

நீண்ட காலமாக முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த சுரேஷ் ரெய்னாவிற்கு நேற்று முழங்காலில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்திய அணியின் மிக முக்கிய வீரராக இருந்த ரெய்னா, பின்னர் காயம், உடல் தகுதியின்மை, ஃபார்ம் அவுட் போன்ற காரணங்களால் இந்திய அணியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நீண்ட காலமாக காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவதிப்பட்ட வந்த அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து 6 வாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.