ADVERTISEMENT

கேதர் ஜாதவ்வைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா! - ஓய்வு பெறுவாரா? 

11:38 AM Apr 12, 2018 | Anonymous (not verified)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக முக்கியமான ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா. சென்னை அணியின் ரசிகர்களால் ‘சின்ன தல’ என செல்லமாக அழைக்கப்படும் இவர், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் சென்னை களமிறங்கிய 134 போட்டிகளிலும் ஓய்வெடுக்காமல் விளையாடியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இரண்டு ஆண்டுகள் கழித்து ஐபிஎல் போட்டியில் சென்னை அணி களமிறங்கியுள்ள நிலையில், ரெய்னா மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சென்னை அணி விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலுமே ரெய்னா 4, 14 ரன்கள் என சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் விளையாடி விடவில்லை. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுனில் நரேன் வீசிய பத்தாவது ஓவரின் போது, ரெய்னா கால்ப்பகுதியில் ஏற்பட்ட வலியால் அவதிப்பட்டார். அதைத் தொடர்ந்து 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பெவிலியன் திரும்பினார்.

இந்நிலையில், சென்னை அணி அடுத்து விளையாடவிருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஏப்ரல் 15) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஏப்ரல் 20) அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சுரேஷ் ரெய்னா காயம் காரணமாக விளையாடமாட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, அணியின் பலமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் தொடைத்தசைப் பிடிப்பு காரணமாக இந்த சீசனில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT