Advertisment

மீண்டும் இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா! - ரசிகர்கள் உற்சாகம்

இந்திய அணியில் நட்சத்திர ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் இடம் பிடித்திருப்பதை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

Advertisment

Suresh

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிகளில் களமிறங்கும் இந்திய அணி வீரர்களின் பெயர்ப்பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

அதில் சுரேஷ் ரெய்னா டி20 தொடரில் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நடத்தப்பட்ட யோ-யோ தேர்விலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். இந்நிலையில், நடந்துமுடிந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக ஆடிய அம்பத்தி ராயுடு, யோ-யோ தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து, அந்த இடத்தை சுரேஷ் ரெய்னா நிரப்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கடைசியாக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, அதன்பிறகு உடல்தகுதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெறாமல் இருந்தார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்குவார் என்ற செய்தி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ambati rayudu England Cricket indian cricket Suresh Raina
இதையும் படியுங்கள்
Subscribe