suresh raina pant

2021ஆம் ஆண்டின்ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல் 9ஆம்தேதி முதல் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளில்ஒன்றான டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் செயல்பட்டு வந்தார். இந்தநிலையில்சமீபத்தில் நடந்த இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஒருநாள்தொடரின்போது ஷ்ரேயஸ் ஐயர் காயமடைந்தார்.

Advertisment

இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்தும், ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் விலகினார். இதனையடுத்துஇந்தியாவின் இளம் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பந்த், டெல்லி அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில்அவருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரருமான சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள். அவர் அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் கேப்டனாக இருப்பார் என்பதிலும், இந்தப் புதிய தொப்பியை (கேப்டன் பொறுப்பை) பெருமையோடு அணிந்து கொள்வார் என்பதில்எந்த சந்தேகமும் இல்லை" என தெரிவித்துள்ளார்.