/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raina-2.jpg)
இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா வரும் 27 -ஆம் தேதி தன்னுடைய 34 -ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு உத்தரப்பிரதேசம், ஜம்மு, டெல்லி பகுதிகளில் உள்ள 34 அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை சுகாதார வசதி மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். ரெய்னா இந்த நலத்திட்ட உதவியைத் தன்னுடைய 'கிரேசியா ரெய்னா' அறக்கட்டளை மூலம் வழங்கவிருக்கிறார்.
இது குறித்தான ரெய்னா பதிவில், "என்னுடைய 34 -ஆவது பிறந்தநாளை, இவ்வகையிலான நகர்வுடன் கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்விபெரும் தகுதிக்குரியவரே. இதுதரமான குடிநீர் வசதி, சுகாதாரமான கழிப்பிட வசதிகளையும் உள்ளடக்கியது. இந்த உதவியை 'யுவா அன்ஸ்டாபபிள்' உடன் இணைந்து 'கிரேசியா ரெய்னா' அறக்கட்டளை மூலமாக வழங்குகிறோம். இதன்மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பயனடைவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இது சிறந்த தொடக்கம். எதிர்வரும் காலங்களில் நிறைய பள்ளிகளை மேம்படுத்த எதிர்பார்த்து இருக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)