Advertisment

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது!

suresh raina

Advertisment

கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருவதால் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நகராட்சி பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேற்று மும்பை போலீஸார் மும்பை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கிளப் ஒன்றில் சோதனை நடத்தினர்.

போலீஸார் சோதனையில் அங்கு கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாதது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த கிளப்பிலிருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டார். அவரோடு பிரபல பாடகர் குரு ரந்தவா மற்றும் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசேன் கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மும்பை போலீஸார், கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதற்காக சுரேஷ் ரெய்னாவோடு சேர்த்து 34 பேர் கைது செய்யப்படாததாகத் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுரேஷ் ரெய்னா, பாடகர் குரு ரந்தவா ஆகியோர் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

covid 19 indian cricket Suresh Raina
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe