Advertisment

"இனிமேலும் காத்திருக்க முடியாது...." வைரலாகும் ரெய்னாவின் பதிவு!!! 

raina

இந்தாண்டு நடைபெற இருந்த 13 ஆவது ஐ.பி.எல். போட்டி, கரோனா நோய்த்தொற்று காரணமாக தள்ளிப்போனது. ஊரடங்கும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னால் இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்நடைபெறும் என்றும் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதனையடுத்து போட்டிகளுக்கான அட்டவணை மற்றும் வீரர்களுக்கான கட்டுப்பாட்டு விதிகள் உருவாக்கும் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.

Advertisment

சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்தி தற்போது அனைவராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் அவர் "சி.எஸ்.கே. குடும்பத்துடனும், ரசிகர்களுடனும் இணைய ஆர்வமாக இருக்கிறேன். இனிமேலும் என்னால் காத்திருக்க முடியாது" எனக் குறிப்பிட்டு ஐ.பி.எல். அறிவிப்பு தொடர்பான தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

Advertisment

IPL CSK Raina
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe