Skip to main content

தங்கராசு நடராஜனை தங்கத்தால் ஜொலிக்க வைத்த சன் ரைசர்ஸ்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
 Sunrisers made Thangarasu Natarajan shine with gold!

தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு சன் ரைசர்ஸ் அணியால் 80 சவரன் தங்க சங்கிலியுடன் கூடிய மெடல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 
 
ஐபிஎல் 2024இன் 35 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே கடந்த 20 ஏப்ரல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வழக்கம் போல அட்டகாசமாய் ஆரம்பித்தது. பவர்பிளேயின் முதல் 6 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து, பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த அணி என்கிற கொல்கத்தா அணியின் சாதனையை முறியடித்தது. ஹெட் 32 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். நித்திஷ் ரெட்டி 37, ஷபாஸ் அகமது 59 என மிரட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளும், அக்சர், முகேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் இமாலய இலக்கை எதிர்கொண்ட டெல்லி அணிக்கு அந்த அணியின் ஜேக் ஃப்ரேசர் 65 அபிஷேக் பொரேல் 42, பண்ட் 41 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய நடராஜன் 4 ஓவர்களில் வெறும் 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முன்னாள் வீரர் புவனேஷ்வர் குமார் உட்பட மூத்த வீரர்கள் பலரும் அவரது பந்து வீச்சைப் பாராட்டினர்.

ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்பு ட்ரெஸ்ஸிங் ரூமில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைப் பாராட்டி அந்த அணியின் வீரர்கள் கவுரவிக்கப்படுவதும், அதை வீடியோ எடுத்து அணிகள் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிடுவதும் தற்போது டிரெண்டாகி வருகிறது. மற்ற அணிகள் சிறிய அளவிலான தங்க பேட்சுகள் மற்றும் இதர பரிசுகளை வழங்கி வருகிறது. ஆனால், சன் ரைசர்ஸ் அணி ஒருபடி மேலே போய் ஒரு பெரிய தங்க சங்கிலியையே பரிசாக நடராஜனுக்கு வழங்கி கவுரவம் செய்துள்ளது. 80 பவுன் எடை கொண்ட தங்க சங்கிலியை நடராஜனுக்கு அணிவித்து, அவர் அந்த சங்கிலியுடன் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Next Story

IPL Final 2024 : வாகை சூடிய கொல்கத்தா!

Published on 26/05/2024 | Edited on 26/05/2024
IPL Final 2024: Kolkata, which has taken the oath!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று (26.05.2024) நடைபெற்றது. இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணி சார்பாக களமிறங்கிய கேப்டன் கம்மின்ஸ் அதிகபட்சமாக 24 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்களான அபிஷேக் சர்மா 2 ரன்களில் போல்ட் அவுட் ஆனார். டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆனார். ராகுல் திரிபாதி 9 ரன்களும், நிதிஷ் ரெட்டி அவுட்13 ரன்களும், மார்க்ரம் 20 ரன்களும் ஹென்றிக் கிளசன் 16 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 113 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது. அதே சமயம் ஆண்ட்ரே ரஸ்ஸல் 3 விக்கெட்களும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்களும், வைபவ் அரோரா, சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்களும் வீழ்த்தினர். இதன் மூலம் கொல்கத்தா அணியில் பந்து வீசிய அனைத்து பந்துவீச்சாளர்களும் விக்கெட் எடுத்து அசத்தினர். 

IPL Final 2024: Kolkata, which has taken the oath!

இந்நிலையில் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. இதனையடுத்து கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முன்னதாக கொல்கத்தா அணி சார்பில் களமிறங்கிய சுனில் நரைன் முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார். அடுத்த பந்திலேயே கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இருப்பினும் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 17 வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 3 வது முறையாக கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது 2012, 2014 மற்றும் 2024 என 3 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சம்பியன் பட்டம் வென்றதன் மூலம் கொல்கத்தா அணி ரூ.20 கோடி பரிசை வென்றுள்ளது. 2 ஆம் இடம் பிடித்த ஐதராபாத் அணி ரூ.13 கோடி பரிசுத் தொகையை வென்றுள்ளது. பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் (287 ரன்கள்) அடித்து சாதனை படைத்திருந்த ஐதராபாத் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் குறைவான (113 ரன்கள்) ஸ்கோர் அடித்து மோசமான சாதனை படைத்தது கவனிக்கத்தக்கது. 

Next Story

IPL Final 2024: ஹைதராபாத் அணி நிதான ஆட்டம்!

Published on 26/05/2024 | Edited on 26/05/2024
IPL Final 2024 Hyderabad team calm game

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று (26.05.2024) நடைபெற்று வருகிறது. இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி ஹைதராபாத் அணி சார்பாக களமிறங்கிய கேப்டன் கம்மின்ஸ் அதிகபட்சமாக 24 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்களான அபிஷேக் சர்மா 2 ரன்களில் போல்ட் அவுட் ஆனார். டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆனார். ராகுல் திரிபாதி 9 ரன்களும், நிதிஷ் ரெட்டி அவுட்13 ரன்களும், மார்க்ரம் 20 ரன்களும் ஹென்றிக் கிளசன் 16 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 113 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.