Gavaskar

‘என் வாழ்வின் இறுதி நிமிடத்தில் நீங்கள் உலக கோப்பையில் அடித்த அந்த சிக்ஸரைபார்க்க வேண்டும்’ என தோனியிடம் கூறியதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

Advertisment

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி சில நாட்களுக்கு முன்னால் சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அவருக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் 2011ம் ஆண்டு நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தைகூறியுள்ளார்.

Advertisment

அதில் அவர், "2011 உலக கோப்பைதொடர் முடிந்ததும் உடனே ஐபிஎல் ஆரம்பித்துவிட்டது. அன்று சென்னை அணிக்கான முதல் போட்டி,நானும் அங்கு மைதானத்தில் இருந்தேன். அப்போது தோனியிடம் பேசுவதற்கான வாய்ப்பு அமைந்தது. மரணப்படுக்கையில் இருக்கும் என் வாழ்வின் இறுதி நொடியில் உலக கோப்பையில் நீங்கள் இறுதியாக அடித்த அந்த சிக்ஸரைபார்க்க வேண்டும். அதை பார்த்து விட்டு இவ்வுலகிலிருந்து மகிழ்ச்சியாக விடைபெறுவேன்என்றேன். அதை கேட்ட தோனி மெல்லமாக சிரித்தார்" என்றார்.