ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் அபாரமாகசெயல்பட்டு பதக்கங்களைக் குவித்து வருகிறார்கள்.
அந்த வகையில்இன்று காலைஅவனி லெகாராதுப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்தார். பாராஒலிம்பிக்கில்இந்தியபெண் வென்ற முதல் தங்க பதக்கம் இதுவாகும். மேலும் இது தற்போது நடைபெற்று வரும் பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்க பதக்கமாகவும்பதிவானது.
இந்தநிலையில்இந்த பாராஒலிம்பிக்சில்இந்தியா தனது இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. ஈட்டி எறிதலில் (எஃப் 64)சுமித் ஆன்டில்உலக சாதனையோடு தங்க பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். இந்த போட்டியில் இரண்டாவது வாய்ப்பில்சுமித் ஆன்டில் 68.55 மீட்டருக்கு ஈட்டியை அசத்தினார்.
இதன்மூலம் தனது சொந்த சாதனையை தானே முறியடித்துள்ளார்சுமித் ஆன்டில். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டி ஒன்றில் அவர் 62.88 மீட்டர் ஈட்டி எறிந்ததேஇதுநாள் வரை உலக சாதனையாக இருந்தது.