Skip to main content

"இது தேவையில்லாதது..." ரசிகர் ஒருவருக்கு ஸ்டுவர்ட் பிராட் அறிவுரை!!!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

stuart broad

 

ஸ்டுவர்ட் பிராட் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அவர் தன்னுடைய சமூக வலைதளபக்கத்தில் அதிக நேரம் செலவிடுவது வழக்கம். சில நேரங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும், அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கும் பதில் கூறுவார். அந்த வகையில் ஒரு கிரிக்கெட் ரசிகர், நீங்கள் பும்ரா அளவிற்கு சிறந்த வீரர் இல்லை என அவரது பதிவிற்கு கீழே கருத்துத் தெரிவித்தார். அந்தக் கருத்திற்கு ஸ்டுவர்ட் பிராட் அளித்திருந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

 

அதில் அவர், நீங்கள் கூறுவதில் நான் உடன்படுகிறேன். எனக்கு அவரது பந்துவீச்சு பிடிக்கும். எனக்குப் பிடித்த சில வீரர்களில் அவரும் ஒருவர். ஆனால் ஒப்பீடு என்பது தேவையில்லாதது. சிறந்த பந்துவீச்சாளரைக் கொண்டாடுங்கள்" எனப் பதிலளித்துள்ளார்.

 

 

Next Story

ரிஷாப் பாண்டை வம்புக்கு இழுத்த ப்ராட்! - ஐ.சி.சி. நடவடிக்கை என்ன?

Published on 22/08/2018 | Edited on 22/08/2018

மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய வீரர் ரிஷப் பாண்ட் விக்கெட் வீழ்த்தியபோது, வம்புக்கு இழுத்த ப்ராட் மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்துள்ளது.
 

Broad

 

 

 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது பேட்டிங் செய்துகொண்டிருந்த ரிஷப் பாண்ட் விக்கெட்டை இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் ப்ராட் வீழ்த்தினார். இதையடுத்து, விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த அவர், ரிஷப் பாண்டை நோக்கி ஆக்ரோஷமாக பேசினார். அவரது இந்த நடத்தை பலராலும் கண்டிக்கப்பட்டது. போட்டி நடுவர்கள் எராஸ்மஸ் மற்றும் கேஃபனி ஆகியோர் இதுகுறித்து புகாரளித்திருந்தனர். 
 

 

 

இந்நிலையில், ஐ.சி.சி. நடத்தை விதிகள் சட்டத்தில் உள்ள 2.1.7 பிரிவை ப்ராட் மீறியதாக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, பந்துவீசுபவர் விக்கெட்டை வீழ்த்தியவுடன் பேட்ஸ்மேனைப் பார்த்து வம்புக்கு இழுக்கும் விதமாகவோ, கோபம் ஏற்படுத்தும் விதமாகவோ பேசக்கூடாது. ஆனால், ஸ்டூவர்ட் ப்ராட் அதை மீறியதால், அவர்மீது நடவடிக்கை எடுத்ததோடு, ஒரு புள்ளியையும் குறைத்து உத்தரவிட்டுள்ளது ஐ.சி.சி.
 

ஐ.சி.சி. நடத்தை விதிகள் 2016-ஆம் ஆண்டு மாற்றப்பட்டன. அதிலிருந்து ஸ்டூவர்ட் ப்ராட் மீது எடுக்கப்படும் முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.  
 

Next Story

எலைட் பௌலர்கள் பட்டியலில் ஸ்டூவர்ட்  ப்ராட் 

Published on 23/03/2018 | Edited on 23/03/2018
stuart broad


 

இங்கிலாந்து நாட்டைச்  சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் ப்ராட். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல்நாள் ஆட்டத்தில் விக்கெட் எடுத்ததன் மூலம் 400 விக்கெட்களை கடந்த வீரர் என்ற  சாதனையை அவர் படைத்துள்ளார்.

400 விக்கெட்டுகளை கடந்த 15வது பௌலர் இவர். இதற்குமுன் கபில்தேவ் (437), ரிச்சர்ட் ஹாட்லீ (431), ஷான் போலாக் (421), ஸ்டெய்ன்(419), ஹர்பஜன் சிங்(417), ரங்கனா ஹேரத் (415), வாசிம் அக்ரம் (414), கர்ட்லி அம்ப்ரோஸ் (405) ஆகியோர் இந்த எலைட் குழுவில் உள்ளனர். 

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இவர் 800 விக்கெட்களை எடுத்துள்ளார். ஷேன் வார்னே 708 விக்கெட்களுடனும், அனில் கும்ப்ளே 619 விக்கெட்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.