Advertisment

துபாயில் திருடுபோன மரடோனாவின் வாட்ச்... அசாமில் கண்டுபிடிப்பு - ஒருவர் கைது!

maradona

Advertisment

துபாயில் திருடுபோன கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின்லிமிடெட் எடிஷன் ஹுப்லாட் வாட்ச், அசாம் மாநிலத்தில் வாஜித் உசேன் என்ற நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. வாட்சைத் திருடிய வாஜித் உசேன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது சட்டப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைஎடுக்க காவல்துறையினர் தயாராகிவருகின்றனர்.

வாஜித் உசேன், மரடோனா பயன்படுத்திய பொருட்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு நிறுவனத்தில் பாதுகாவலராக பணியில் சேர்ந்ததாகவும், சில நாட்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த பிறகு, தனது தந்தைக்கு உடல்நலம்சரியில்லை என கூறி விடுப்பு எடுத்துக்கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் அசாம் மாநிலத்திற்கு வந்ததாகவும் அசாம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

துபாய் போலீசார், திருட்டு குறித்தும்குற்றவாளி குறித்தும்அசாம் போலீசாரை தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து, வாட்சைத் திருடிய வாஜித் உசேன் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Assam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe