Advertisment

உங்கள் யுக்தி விராட் கோலியிடம் எடுபடாது... ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அறிவுரை கூறும் ஸ்டீவ் வாக்!

Steve Waugh

Advertisment

உங்கள் யுக்தி விராட் கோலியிடம் எடுபடாது என ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் அறிவுரை கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இத்தொடரில் பங்கெடுக்கும் அணி வீரர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டித் தொடர், சிட்னி மைதானத்தில் வரும் நவம்பர் 27 -ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்ஸ்டீவ் வாக், இது குறித்துப் பேசுகையில், "சீண்டுதல் யுக்தி குறித்து விராட் கோலி கவலைப்படமாட்டார். சிறந்த வீரர்களிடம் இது போன்ற செயல் எடுபடாது. அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது நல்லது. இதுபோன்ற செயல் அவருக்குக் கூடுதல் உத்வேகம் அளித்து அதிக ரன்களை எடுக்க வழிவகுக்கலாம். ஆதலால், அவரிடம் சீண்டல் இல்லாமல் இருப்பதே நலம்" எனக் கூறினார்.

Steve waugh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe