Advertisment

ராஜஸ்தான் ராயல்ஸை காப்பாற்றுவாரா புதிய கேப்டன்

ஐ.பி.எல். தொடரில் விளையாடிவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அஜிங்கிய ரஹானே நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார் என்று ராஜஸ்தான் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இனி வரும் ஆட்டங்களிலும் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

steve smith

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கடந்த ஆண்டு ஐ.பில்.எல். போட்டிக்கு மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரஹானே அணியை பிளே ஆஃப் சுற்றுவரை கொண்டு சென்றார். அதனால் இந்த ஆண்டும் ரஹானேவே கேப்டனாக தொடர ராஜஸ்தான் நிர்வாகம் முடிவுசெய்திருந்தது.

ஆனால், இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 2 வெற்றிகள், 6 தோல்விகள் அடைந்து. புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. கடந்த 4 போட்டிகளாக தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது. இதனால் அந்த அணியின் நிர்வாகம் அதிரடியாக ரஹானாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு ஸ்டீவ் ஸ்மித்தை அமர்த்தியுள்ளது.

ipl2019 Rajasthan royals stevesmith
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe