இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே ஒருநாள்மற்றும் 20 ஓவர்தொடர்கள் முடிந்துவிட்ட நிலையில், டெஸ்ட்தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்தஸ்மித், தன்னால்கடந்த 2018-19 ஆம் ஆண்டு நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட்தொடரின்முடிவைஒருவேளை தன்னால்மாற்றிருக்க முடியும்எனகூறியுள்ளார். அந்த டெஸ்ட்தொடரை, இந்தியஅணி கைப்பற்றி சாதனைபடைத்தது. அப்போது, பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஸ்மித் மற்றும் வார்னருக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித், நான் கடந்த இந்தியா- ஆஸ்திரேலியா தொடரைபாதிப்பாதியாக பார்த்தேன். அந்த தொடரில்களம்இறங்கி, அத்தொடரின்முடிவைமாற்றாமல்வெளியில் அமர்ந்து பார்க்க மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால் ஒருவேளை என்னால் அந்தத்தொடரின் முடிவை மாற்றியிருக்க முடியும் எனஎனக்குத் தெரியும். இருந்தாலும், இப்போதுஒரு அட்டகாசமான தொடர் வருகிறது. நாங்கள் நன்றாக ஆடி வருகிறோம். இந்திய அபாயகரமான ஒரு அணி. நம்பமுடியாத அளவிற்குசிறந்த பேட்ஸ்மேன்களையும், சிறந்த பந்து வீச்சாளர்களையும் கொண்டுள்ளது. நாங்களும்சிறந்தபந்துவீச்சை கொண்டுள்ளோம்" எனசெய்தியாளர்களிடம்கூறியுள்ளார்.