Advertisment

ஸ்டீவ் ஸ்மித்திற்கு 12 லட்சம் அபராதம் விதிப்பு!

Steve Smith

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற 20-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18.1 ஓவரின் முடிவில் 136 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியில், மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Advertisment

இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்து வீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இதனையடுத்து அவ்வணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்திற்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Rajasthan royals stevesmith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe