Advertisment

ஸ்டீவ் ஸ்மித் தலையைப் பதம் பார்த்த உதவியாளர்!!! அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல்..

steve smith

வலைப்பயிற்சியின்போது பயிற்சி உதவியாளர் எறிந்த பந்து ஸ்டீவ் ஸ்மித் தலையைபலமாகதாக்கியதால்அடுத்தடுத்த போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இச்சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நான்கு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மூத்த வீரரான ஸ்டீவ் ஸ்மித் இடம்பெறவில்லை. இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. வலைப்பயிற்சியின் போது பயிற்சி உதவியாளர் எறிந்த பந்து அவரது தலையைபலமாகதாக்கியுள்ளது. இதனையடுத்து அவருக்கு மூளை அதிர்ச்சி சோதனை செய்யப்பட இருக்கிறது. இச்சோதனை இரு கட்டமாக நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த போட்டிகளிலும் அவரால் பங்கெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

stevesmith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe