Advertisment

அடுத்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் களமிறங்குவாரா? ஸ்டீவ் ஸ்மித் விளக்கம்!

Steve Smith

Advertisment

அடுத்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் களமிறங்குவாரா என்ற கேள்விக்கு ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விளக்கம் அளித்துள்ளார்.

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியான நான்கு தோல்விகளை சந்தித்து அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி வீரரான பென் ஸ்டோக்ஸ், தன்னுடைய சொந்த காரணங்களால் தொடக்க போட்டிகளில் பங்கெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த வாரம் அமீரகம் வந்தடைந்த பென் ஸ்டோக்ஸ், தற்போது தன்னை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறார். இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் குறித்து ஸ்டீவ் ஸ்மித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித், "ஸ்டோக்ஸ் இன்னும் பயிற்சியில் ஈடுபடவில்லை. இன்னும் ஒரு சில நாளில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துவிடுவார். அடுத்த போட்டியில் அவர் களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" எனக் கூறினார்.

Advertisment

ராஜஸ்தான் அணி நாளை மதியம் நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் அணியை துபாய் சர்வதேச மைதானத்தில் எதிர்கொள்கிறது.

IPL stevesmith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe