gfhfhgfh

Advertisment

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் ஏற்கனவே இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று நடந்து முடிந்த இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றுள்ளது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது. இதற்கு முன்பு இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் தென் ஆப்பிரிக்காவில் ஓரிரு போட்டிகளில் வென்றாலும், தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது. இந்த தொடரை தவிர்த்து, கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு நடந்த எந்த போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.