/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/india3444.jpg)
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
கொழும்புவில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 86, இஷான் கிஷன் 59, பிரித்வி ஷா 43, சூர்யகுமார் 31 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக கருணரத்னே 43, ஷனகா 39, அசலங்கா 38, ஃபெர்னாண்டோ 33 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் தீபக் சாஹர், சாஹல், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)