Advertisment

நேரலையின் போது அலட்சியம் காட்டிய ஸ்ரீகாந்த் - கட்டுப்போட்ட முன்னாள் வீரர்!

Srikanth's Cricket Bat; Hemang Pathani with injury

ஆசிய கோப்பை கிரிக்கெட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டு இருந்த போது எதிர்பாராமல் ஹேமங் பதானியை ஸ்ரீகாந்த் தாக்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Advertisment

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த், சடகோபன் ரமேஷ் மற்றும் ஹேமங் பதானி ஆகியோர் இணைந்து ஆசிய கோப்பையின் முதல் போட்டியை தொகுத்து வழங்கி கொண்டு இருந்தனர். அப்பொழுது கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கையில் கிரிக்கெட் மட்டையை வைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது இலங்கையின் கிரிக்கெட் வீரர் போல் செய்து காட்டிய பொழுது பேட் எதிர்பாராத விதமாக அருகில் இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஹேமங் பதானியின் வலது கை முழங்கையில் பட்டது. முதலில் சமாளித்து நின்ற ஹேமங் பதானி பின் வலி தாங்க முடியாமல் கேமேராவிற்கு பின் சென்றார். பேட் அவர் மேல் பட்டது தெரிந்தது என்றாலும் அவர் வலியில் இருந்ததை சிறிது நேரம் கழித்து கவனித்த ஸ்ரீகாந்த் தெரியாமல் நடந்து விட்டதாக கூறி மன்னிப்பு கேட்டார்.

தற்போது ஹேமங் பதானி சிகிச்சை எடுத்துக்கொண்டு வலது கையில் கட்டு போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

cricket Srikkanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe