Advertisment

சச்சின் தெண்டுல்கரையும் விட்டுவைக்காத ஸ்ரீரெட்டி!

Sachin

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம், திரைத் துறையில் கொடிகட்டிப் பறப்பதாக பரபரப்பைக் கிளப்பியவர் நடிகை ஸ்ரீரெட்டி. அதோடு நிற்காமல் நிர்வாணப் போராட்டமும் நடத்தி, தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். அதேபோல், தான் சொல்வதில் உண்மை இருப்பதாகக் கூறியவர், சில புகைப்படங்களையும் வெளியிட்டார். தமிழ், தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகர்கள், இயக்குனர்களின் மீது அவர் குற்றம்சாட்டி வந்தார்.

Advertisment

தற்போது, அவர் கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கரைப் பற்றிய ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். “தனது முகநூல் பக்கத்தில், “சச்சின் தெண்டுல்கர் என்ற ரொமாண்டிக் மனிதர், ஐதராபாத்திற்கு வரும்போதெல்லாம் ‘சார்மி’ங்கான பெண்ணைச் சந்தித்து, ரொமான்ஸாக இருப்பார். பிரபல சாமுண்டீஸ்வர் சுவாமிதான் இவர்களுக்கு மத்திய நபர். மிகச்சிறந்தவர்கள் சிறப்பாக விளையாடுவர்கள்; நான் ரொமான்ஸைச் சொன்னேன்” என பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீரெட்டியின் இந்தக் குற்றச்சாட்டை நெட்டிசன்கள் அவ்வளவு ஜாலியாக எடுத்துக் கொள்ளவில்லை. திரைத்துறை விரும்பிகள் மட்டுமின்றி, சச்சின் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களும் ஒன்றுகூடி ஸ்ரீரெட்டியை வறுத்தெடுத்து வருகின்றனர். அடுத்தது யார்.. ராகுல்காந்தி, மோடி, ட்ரம்ப் அல்லது புதின்?? என அதில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

cinema sports Sachin Tendulkar sri reddy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe