Natarajan

சேலத்தை பூர்வீகமாககொண்ட தமிழகத்தைசேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான நடராஜன் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், 15 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Advertisment

கடந்த 2018-ம் ஆண்டு நடராஜன்-பவித்ரா தம்பதியினருக்குதிருமணம் நடந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்க நடராஜன் அமீரகம் கிளம்பியபோது, அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், இத்தம்பதியினருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, அவருக்குபலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment