Advertisment

தடைக்காலம் நிறைவு... மீண்டும் அணியில் ஸ்ரீசாந்த்???

sreesanth

கடந்த காலங்களில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ஸ்ரீசாந்த் இருந்து வந்தார். களத்தில் அவர் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் விதமும், வெளிப்படுத்தும் கோபமும் பலமுறை சர்ச்சையாக வெடித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது சூதாட்ட சர்ச்சை பெரிய அளவில் கிளம்பியது. அதில் ஸ்ரீசாந்த் பெயரும் இடம்பெற்றது. பின் விசாரணையில் ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. அதனையடுத்து அவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. பின் அந்ததண்டனை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. தற்போது ஸ்ரீசாந்த் தன்னுடைய ஏழு ஆண்டு தடைக்காலத்தை நிறைவு செய்துள்ளார். தடை முடிந்தவுடன் நிச்சயம் அணிக்குதிரும்புவேன் என்று ஸ்ரீசாந்த் முன்னர் கூறியிருந்தார்.

Advertisment

அதன்படி உடல்தகுதி மற்றும் தேவையான இன்னபிற சோதனைகளை நிறைவு செய்யும் பட்சத்தில், அவர் முதற்கட்டமாக உள்ளூர் போட்டிகளுக்கான அணிக்குதிரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

Sreesanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe