vk morgan

Advertisment

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இருபது ஓவர் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவும், நேற்று (16.03.2021) நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றிபெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது இருபது ஓவர் போட்டி நாளை (18 மார்ச்) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில்இந்தியாவில் கரோனாபாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. குஜராத்திலும்கரோனாபரவல் அதிகரித்து வருவதால், போட்டி நடைபெறவுள்ள அகமதாபாத் உள்ளிட்ட நான்கு நகரங்களில் இன்று முதல் 31ஆம்தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில்அகமதாபாத்தில் உள்ள தோட்டங்கள் மற்றும் பூங்காக்களை நாளை முதல் மறுஉத்தரவு வரும்வரைமூட குஜராத் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் நாளை இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது இருபது ஓவர் போட்டி நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு கரோனா பரவலால் இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடர் பாதியில் இரத்தானது குறிப்பிடத்தக்கது.