Advertisment

உலகில் முதல்முறையாக டி.என்.பி.எல்.-ல் அறிமுகம் ஆகும் ஸ்மார்ட் பேட்! 

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் விரைவில் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் குறித்த அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகின. இந்தத் தொடரில் ஸ்பெக்டாகாம்எனப்படும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Advertisment

kumble

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

ஸ்பெக்டாகேம் எனப்படுவது ஒருவகை ஸ்மார்ட் ஸ்டிக்கர் ஆகும். ட்ராக்கிங் சென்சார் இருக்கும் இந்த ஸ்டிக்கரை, பேட்ஸ்மெனின் பேட்டில் ஒட்டிவிட்டால் அந்த பேட் ஸ்மார்ட் பேட் ஆகிவிடும். இதன்மூலம், பேட்டின் வேகம், அடிப்பவரின் பலம் மற்றும் பந்து பேட்டின் சரியான இடத்தில் பட்டதா? என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். உலகளவில் முதல் முறையாக டி.என்.பி.எல்-ல் அறிமுகமாக இருக்கும் இந்த ஸ்மார்ட் ஸ்டிக்கரைக் கண்டுபிடித்தவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேதான்.

இதுகுறித்து பேசிய அவர், ‘எனது கண்டுபிடிப்பை டி.என்.பி.எல். மூலம் அறிமுகம் செய்வதில் பெருத்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் இருக்கும் திறமைவாய்ந்த வீரர்களை ஐ.பி.எல். மற்றும் இந்திய அணிக்கு வழங்கியதில் டி.என்.பி.எல்.க்கும் பெருமை உண்டு. அதனால்தான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் போன்ற வீரர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார். டி.என்.பி.எல். தொடர் வரும் ஜூலை 11ஆம் தேதி தமிழகத்தில் தொடங்க இருக்கிறது.

Anil kumble Smart bat TNPL
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe