ADVERTISEMENT

டெஸ்ட் தொடரில் பிட்சை மோசமாக்கிய தென் ஆப்பிரிக்க அணி! - முன்னாள் பயிற்சியாளர் காட்டம்

10:17 AM Feb 12, 2018 | Anonymous (not verified)

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, சமீபத்தில் மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடியது. இந்தத் தொடரில் இந்திய அணி 1 - 2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.

ADVERTISEMENT

இந்த வெற்றி குறித்து பேசியுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ், ‘இந்தத் தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணியின் மேலாண்மைக் குழு பிட்சுகளை மோசமாக்கியது. ஆனால், அது தென் ஆப்பிரிக்க அணிக்கே எதிராக அமைந்தது. கிட்டத்தட்ட அந்த அணி தோற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால், தோல்வி தவிர்க்கப்பட்டது. இந்தியாவில் வேகப்பந்துகளை எதிர்கொள்ளும் வீரர்கள் இருக்கும் நிலையில், அது எடுபடாது. அதனால்தான் அந்த அணியின் ஸ்பின்னர்கள் கூட வேகப்பந்துகளை சாதாரணமாக எதிர்கொண்டனர்’ என தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும், பத்து ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. ஆனால், தற்போது 19 வயதுக்குட்பட்ட வீரர்களில் தொடங்கி, அந்த அணியில் ஏகப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். அவர்களால் இயல்பாகவே மணிக்கு 135 கிமீ வேகத்தில் பந்துவீச முடியும். பல விதங்களில் தென் ஆப்பிரிக்க அணி தவறு செய்கிறது. உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்பாக அதையெல்லாம் சரிசெய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT